சுந்தர ராமசாமி இழிவுபடுத்தினாரா?
சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல. அது எவரையும் இழிவுபடுத்தவும் இல்லை. தமிழில்வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம்.
அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை, ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண் என இரண்டு கதைசொல்லிகள் வருகின்றனர். தங்கக்கண் கொஞ்சம் கூட்டிச் சொல்கிறவன். அவனிடம் கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு.
"பொட்டையா? போடாதே மேல் சீலை என்று ஒடுக்கப்பட்டிருந்த குடும்பம் ஒன்றிலிருந்து வருபவள் தாயம்மா. ஒரு ஜெர்மன்பாதிரியாரின் உதவியால் ஐரோப்பாவில் மிகப்பெரிய பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராகக் கல்விபெறுகிறாள்.
மனசுக்குள் ஆங்கிலம் பேசி, யாருமில்லாத நேரங்களில் ஆங்கிலக் கவிதைகளை வாய் விட்டு சொல்லிப் பார்த்து, தனதுதிறமையை புரிந்து கொள்ள அந்த ஊரில் ஒருவருமில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த தாயம்மா, காலத்தின் கூத்தால் ஒருபள்ளியின் தலைமை ஆசிரியை ஆக்கப்படுகிறாள்.
1950களில் அவளுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம். தினமும் மீன் சாப்பிட்டு, நாளுக்கொரு சேலை உடுத்தி, பார்க்கிற பெண்களும்பொறமை கொள்கிற அழகோடு இருக்கிற தாயம்மாவை தேர்தலில் நிற்கச் சொல்லி அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்.
இப்படிப் பேரும் புகழுமாக இருக்கும் அவளை ஒரு நாள் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் ரகசியமாக கூடி சதி செய்து பழி சுமத்திஅடித்து விரட்டுகிறார்கள்.
ஐம்பத்து மூன்று வருடங்கள் தாயம்மாள் போன இடம் தெரியவில்லை. எண்பது வயதைத் தாண்டி விட்ட நிலையில் மீண்டும்அவள் அந்த ஊருக்கு வருகிறாள். அப்போது அவள் பகலில் வெளியே தலைகாட்டக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கிறது.
நாம் ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு அவளை நல்ல முறையில் காப்பாற்றலாம் என தங்கக்கண்ணிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் முன்வரும் வேளையில் தாயம்மாள் இறந்து விட்டாள் என்று சொல்லி கதையை முடிக்கிறான் தங்கக்கண்.
கல்மனசையும் உருகச் செய்யும் இந்தக் கதை ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் தங்கக்கண்ணால் தான் சொல்லப்படுகிறது. அதுஅவன் சொன்ன கட்டுக்கதையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவன் கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு என முன்பே ஒருகுறிப்பு தரப்பட்டுள்ளது.
தாயம்மா மீது சுமத்தப்பட்டது வீண்பழி தான் என்பதைப் புரிந்து கொள்ள சுந்தர ராமசாமி கதையில் பல தடயங்களை விட்டுச்செல்கிறார். தாயம்மாவின் அழகு மட்டுமின்றி அவளது செல்வச் செழிப்பும் அவள் மீது பொறாமை உண்டாகக்காரணமாயிருக்கலாம்.
அவளுக்கு அபவாதம் வந்துசேரக் காரணமாக இருந்த மாணவன் மணிகண்டன் ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகன். கணக்கில்ஓட்டையான அவனுக்கு சிரத்தை எடுத்துக் கொண்டு தனியே பாடம் சொல்லித் தருகிறாள் தாயம்மா.
மணிகண்டன் வீட்டுக்கு வரும்போது அவன் முகம் வீங்கி இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. அவனை கன்னத்தில் அடித்து பாடம்சொல்லித் தந்ததால் அப்படி முகம் வீங்கிப் போயிருக்கலாம்.
அதனால் கோபம் கொண்ட அந்தப் பையனின் தாய் ஊரெல்லாம் தாயம்மா மீது கோபப்படுகிற மாதிரி ஒரு பொய்க்கதையைகிளப்பி விட்டிருக்கலாம். இப்படிப் பார்ப்பதற்கான தடயங்களே அந்தக் கதையில் உள்ளன.
தாயம்மாவின் ஒழுக்கம் பற்றி சந்தேகம் கொள்கிற மாதிரி கதைக்குள் ஒரு குறிப்புமே இல்லை. ஊர்ப் பிரமாணிகளும், சகஆசிரியர்களும் பதுங்கியிருந்து அவளை அடித்துத் துன்புறுத்தும் காட்சியின் வர்ணனை மட்டுமின்றி மிகவும் துயரார்ந்தமுறையில் சொல்லப்பட்டுள்ள அவளது மரணமும் அவள் மீது சுமத்தப்பட்டது வீண் பழி தான் என்பதற்கு சாட்சியங்களாகஉள்ளன.
மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு (sign system) என்று மொழியிலாளர்கள் சொல்லியுள்ளனர். ஒரு பிரதியைவாசிப்பதற்கு முன் அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்க வேண்டும்.
விளை என முடியும் ஊரின் பெயரும், தாயம்மா, தங்கக்கண் என்பன போன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடுஎதுவென தெரிந்து கொள்ள நாகர்கோயில் பகுதியின் பண்பாட்டு வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும் போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
தாயம்மாவை தாழ்ந்த ஜாதிப்பிள்ளை என்று கதையில் வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக் கொண்டு அவள் இன்றைய தலித்சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என்று முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையை ஆகும்.
திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியிலும்,அப்படிப் போராடிய சமூகத்தவருக்கு கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்துஇந்தக் கதையை வாசிக்க வேண்டும். அப்போது தான் இது அந்த மக்களுக்கு ஆதரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும்.
மாடக்குழியை ஓரிடத்தில் மாங்குளம் என தவறாகக் குறித்திருப்பது, உள்ளூர் தினசரியின் தலைமைை நிருபருக்கு இப்போதுநாற்பது ரூபாய் சம்பளம் எனச் சொல்வது போன்ற சிறு பிழைகள் இருந்த போதிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகவைப்பதற்கு தகுதி பெற்றது இந்தக் கதை.
இது தலித்துகளுக்கு எதிரானது என்றும், இதை எழுதியவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்வழக்கு போடுவோம் என்றும் சொல்வது தலித்துகளுக்கு இலக்கியத்தை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது,
அவர்கள் சாதியை சொல்லி பிளாக் மெயில் செய்யக்கூடியவர்கள் என்பது போன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.
- ரவிக்குமார்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications