அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் வரும் ஏப்ரல் 5மே தேதி கவிஞர் அபிவை டி.எம்.எம்.தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் நடக்கும் இந்த விழாவை சே.ரெ. பட்டணம் மணி, மீரா. அப்துல் கதீம், இ. இசாக், பாரத்,
குத்தாலம் அஷ்ரப் அலி, கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்கள்
ஏற்பாடு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ்.தாஜுதீன் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
ஈமான் அமைப்பின் மார்க்கச் சொற்பொழிவு:
இன்று (திங்கட்கிழமை) துபாய் ஈமான் அமைப்பு சார்பில்
சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும், தமிழக
அரபிக் கல்லூரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவருமான அல்ஹாஜ் மௌலவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தஉள்ளார்.
மேற்கண்ட தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத்அலி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின் 050 2533212 ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழ்ச் சங்கத்தின் நகைச்சுவை பட்டிமன்றம்:
துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏப்ரல் 3ம் தேதி மாலை 7.30 மணிக்கு
துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் ராஜா பங்கு பெறும் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
அத்துடன் பிரவஸி பாரதிய சம்மன் விருதுபெற்ற இந்திய சமூக நலச் சங்கஒருங்கிணைப்பாளர் கே. குமார் கௌரவிக்கப்பட உள்ளார். மேலும் இவ்விழாவில் தலைமை விருந்தினர்களாக ராதிகா மற்றும் சரத்குமார் பங்கேற்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நடனம் நடைபெறும் என துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் திருமதி சந்திரா ரவி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர், அகுமென், நைல் ஹெர்பல் ஹேர் ஆயில், ஈடிஏ ஸ்டார், ரிட்ஸி பால்ம் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதவிகரமாக இருந்து வருகின்றன.
இந்நிகழ்ச்சியின் ஊடக அணுசரனை விண் டிவி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications