ஆளுநர் மாளிகையில் நட்சத்திர ராசி பூங்கா அமைப்பு

சென்னையின் மையப்பகுதியான கிண்டியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான அரிய வகை தாவரங்கள், மரங்கள் அடர்ந்த இயற்கை வனச்சூழலில் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது.
இதில் அழிந்து வரும் அரிய வகை மான் இனத்தைச் சேர்ந்த பிளாக் பக், சிங்காரா மற்றும் அல்பினோ, மங்கூஸ், குள்ளநரிகள் போன்ற விலங்குகளும், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவை வகைகளும் இங்கு வசிக்கின்றன.
ஆளுநர் மாளிகைக்குள் அழகிய பரந்த புல்வெளி மற்றும் நீள்வட்ட புல்வெளி, வெள்ளிவிழா தோட்டமும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. பார்ப்பதற்கு கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் இதயத்துக்கு ரம்மியமாகவும் இருக்கும்.
இந்த நிலையில் பிறந்தநாள் ராசியான 27 நட்சத்திரங்களுக்குத் தொடர்புடைய மரங்களை நட்டு பார்வையாளர்களை கவரும் புதிய நட்சத்திர தோட்டத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி இன்று நடந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக, அவரது ராசிக்குரிய மரக்கன்றை நட்டு பர்னாலா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவரது மனைவி சுர்ஜித் கவுர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆளுநரின் செயலர் சந்தீப் சக்ஸேனா மற்றும் ராஜ்பவன் அதிகாரிகள் தங்கள் ராசிக்குரிய மரக்கன்றுகளை நட்டனர்.
இதே போன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும் ஒரு நட்சத்திர பூங்கா உள்ளது. அதே வரிசையில் சென்னை ராஜ்பவனிலும் நட்சத்திரப் பூங்கா நிறுவப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications