Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

888 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி அளிக்க பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 885 தமிழறிஞர்களுக்கு நிதியுதவிஅளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழியைப் பேணிக் காக்கும் வகையிலும் தமிழ் வளர்ச்சி - பண்பாட்டினை மேம் படுத்தும் வகையிலும் தொண் டும் தியாகமும் செய்துள்ளவர் களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு நிதியுதவி வழங் கும் திட்டம் அரசால் செயற் படுத்தப்பட்டு வருகிறது. இவர்களின் மறைவிற்குப் பின் இவர்களது மரபுரிமையருக்கும் நிதியுதவி வழங்கப்படு கிறது.

நிதியுதவி பெறத்தக்கவர்களைத் தெரிவு செய்வதற்கான உயர்நிலைக் குழுக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கா.பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத்தகுதியுள்ள 885 பேருக்கு நிதியுதவி வழங்கிட உயர்நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தமிழ்மொழி - பண்பாட்டினைக் காத்திடவும் வளர்த்திடவும் தொண்டும் தியாகமும் செய்தவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவியாக ரூ.3000/- மற்றும் மருத்துவப் படியாக ரூ.15/-ம் மரபுரிமையர் எனில் ரூ.1500/- மருத்துவப்படி ரூ.151ம் வழங்கப்படும்.

எல்லைக்காவலர் எனில் மாதம் தோறும் நிதியுதவியாக ரூ.400/- மற்றும் மருத்துவப்படி ரூ.151ம் எல்லைக்காவலர் களின் மரபுரிமையினர் எனில் ரூ.2,000/- மற்றும் மருத்துவப் படி ரூ.15ம் வழங்கப்படும். இந்நிதியுதவிகள் இவர்க ளுக்கு 17.4.08 முதல் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 28.02.2008 அன்று நடைபெற்ற கூட்ட முடிவின்படி 635 பேருக்கு நிதியுதவிகள் வழங்கிட ஆணையிட்டது என்பது குறிப்பிடத்தக்கது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+