சேரன்மாதேவி தமிழ்ப் பேரவை ஆண்டுவிழா
சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவையின் 45ம் ஆண்டு நிறைவு விழா 3 நாட்கள் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் நிகழ்ச்சிக்கு மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் பி. ராமையா தலைமை வகித்தார். தமிழ்ப் பேரவைத் தலைவர் மா. சுப்பிரமணியம் வரவேற்றார்.
நாட்டுப்புற இசை, நாகசுர நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செயலர் இ.மா. கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து 2-ம் நாள் புதுமை படைப்புகளில் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'தமிழ் அமுது' என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ச. பாபநாசம், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவி மா. கல்யாணிசுந்தரி, தமிழ்ப் பேரவை துணைத் தலைவர் ப. மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, பட்டிமன்றம் நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் காப்பியமும், இலக்கியமும் என்ற தலைப்பில் பலர் பேசினர். தொடர்ந்து ஸ்காட் கல்விக் குழுமத் தலைவர் சூ. கிளீட்டஸ் பாபுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் புலவர் வீ. செந்தில்நாயகம், நுகர்வோர் சங்கத் தலைவர் வா. சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications