தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர்: தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்துவரும் இளைஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
1.4.07 முதல் 31.3.08 இடைப்பட்ட காலத்தில் செய்த சமூக நலப்பணிகளுக்கான விருதுகள் இவ்வாண்டு வழங்கப்பட உள்ளது.
தகுதிகள்
இவ்விருதைப் பெற வயது வரம்பு 13 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் இன்றி தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் மீண்டும் விருது பெற இயலாது.
மத்திய, மாநில, பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
தன்னார்வ தொண்டு நிறுவன தகுதிகள்: சங்க பதிவு சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். லாப நோக்குடன் தொண்டு செய்திருக்கக்கூடாது.
சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனம் விண்ணப்பிக்க இயலாது. சமூக நலப்பணிகளில் ஈடுபட்ட புகைப்படம், செய்திக்குறிப்பு இணைக்கப்பட வேண்டும்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 25 இளைஞர்களுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும். தேர்வாகும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், பட்டயம், வெற்றிச் சின்னம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து திங்கள்கிழமைக்குள் (30.6.08) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9940341482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications