திருச்சியில் தெலுங்கு நாட்டுப்புற கலைவிழா
திருச்சி: தென்னிந்திய தெலுங்கு நாட்டுப்புற கலைவிழா வரும் ஜூலை 5 மற்றும் 6 தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.
ஐதராபாத் தெலுகுவாணி டிரஸ்ட், திருச்சி மாவட்ட ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட அனைத்து தெலுங்கு இன சங்கங்கள் சார்பில் நடக்கும் இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இதுபற்றி கலைவிழா தலைவர் ஜெயராமன், செயலாளர் கோபால், செய்தித் தொடர்பாளர் மோகன் ஆகியோர் அளித்த பேட்டி:
திருச்சி வாசவி மஹாலில் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற் பட்ட கலைஞர்கள் பங்கேற்று, 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
ஆந்திர மாநிலத்திலுள்ள 9 பல்கலைக்கழங்களைச் சேர்ந்த 100 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவுக்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவும் முன்னிலையும் வகிக்கிறார்கள்.
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பனபாகலஷ்மி, ஆந்திர அரசு சுற்றுலா மற்றும் கலைத்துறை அமைச்சர் ராமநாராயண ரெட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி, திருச்சி மாநகர துணை மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து 6ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையும், ஆந்திர கால்நடைத் துறை அமைச்சர் புத்த பிரதசாத் முன்னிலையும் வகிக்கிறார்கள். ஐதராபாத் பொட்டி ஸ்ரீராமுலு தெலுகு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆவுல மஞ்சு லதா கலைஞர்களுக்கு பரிசு வழங்குகிறார், என்று தெரிவித்தனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications