கற்பனையின் உச்சம் கண்ணதாசன்-சிவகுமார்

கோவையில் நடைபெற்ற கண்ணதாசன் கழக துவக்க விழாவில் அவர் பேசியது:
வாழும்போது ஒருவரை புகழ்வதைவிட, அவர் இறந்த பின்னரும் புகழ்வது கடினமான காரியம். ஆனால் கண்ணதாசன் மாதிரி காலத்தால் அழியாத இறவாப் புகழ் கொண்டவர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை.
ரசிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் நெஞ்சத்தில் எப்போதும் நிறைந்திருப்பவர் கண்ணதாசன். கவிதையில் வீச்சு, எழுத்து நடையில் எளிமை என அவர் தனிபாணியே வகுத்துவைத்திருந்தார். காதல் பாடல்களில் கற்பனையின் உச்சத்துக்கே சென்றவர் கண்ணதாசன். ஆன்மிகத்தையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் அவரைவிட எளிமையாகச் சொன்னவர் எவருமில்லை... என்றார் சிவக்குமார்.
எழுத்தாளர் பழ.கருப்பையா பேசுகையில், எந்த ஒரு தலைவருடைய வாழ்விலும் ஒரு கட்டத்தில் தேக்கநிலை இருக்கும். பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது இதை அறிந்துகொள்ளலாம். தான் மதிக்கும் தலைவர்கள், நண்பர்களிடம் நட்பில் ஆழமாகப் பழகியவர் கண்ணதாசன்.
அதேநேரத்தில் தவறு செய்யும் தலைவர்கள், நண்பர்களை கடுமையாக விமர்சனம் செய்யவும் அவர் தயங்கியதில்லை. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளத்துக்கு விட்டுக் கொடுத்தபோது, காமராஜர் மீதும், திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டபோது அண்ணா மீதும் விமர்சனம் செய்து கவிதை எழுதியவர் கண்ணதாசன்.
இன்றைய கவிஞர்களிடம் சிந்தனை வறண்டுவிட்டது. இதனால் வெளிநாட்டு கவிதைகளை தமிழாக்கம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். இது தவறான போக்கு, என்றார் கருப்பையா.
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, கண்ணதாசனின் நண்பர் வி.ஏ.முத்து மாணிக்கம், தென்னிந்திய பதிப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், கண்ணதாசன் கழக அமைப்பாளர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விஜயா பதிக்க உரிமையாளர் மு.வேலாயுதம் வரவேற்றார்.












Click it and Unblock the Notifications