எம்டன் கப்பலில் பணியாற்றிய தியாகி செண்பகராமனின் சிலை திறப்பு
சென்னை: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய, சென்னை மீது குண்டு வீசிய ஹிட்லரின் எம்டன் கப்பலில் பணியாற்றிய தியாகி செண்பகராமனின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவில் இருந்து ஜெர்மனி சென்று அங்கு இருந்து கொண்டே இந்தியாவின் சுதந்திரத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தியாகங்களை புரிந்தவர் டாக்டர் செண்பகராமன்.
ஜெய்ஹிந்த் என்ற கோஷத்தை முதலில் எழுப்பிய இவர், சுபாஷ் சந்திரபோசையும் ஜெய்ஹிந்த் என்ற கோஷத்தை முழங்கச் செய்தவர். ஜெர்மனி மன்னர் கெய்சரின் ஆலோசகராக சில காலம் பணிபுரிந்த இவர், ஹிட்லரின் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து எம்டன் கப்பல் படையில் பணியாற்றினார்.
அப்போது, 1914ம் ஆண்டில் நடந்த முதல் உலகப் போரின்போது இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்டும் நோக்கத்தில் எம்டன் கப்பலின் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் குண்டுவீச காரணமாக இருந்தவர்.
இதுபோல இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட, தமிழகத்தை சேர்ந்த 1,235 தியாகிகளின் புகைப்படங்கள், காந்தி மண்டப வளாகத்தினுள் அமைந்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தினுள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தின் முன்பாக, ஏற்கனவே தியாகி ஆர்யா என்னும் பாஷ்யம் மற்றும் தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரது சிலைகளை 17.7.1999-ல் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது, இந்த சிலைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள தியாகி செண்பகராமனது சிலையையும், முதல்-அமைச்சரே திறந்து வைக்க உள்ளார்.
காந்தி மண்டப வளாகத்தினுள் தியாகிகள் மணி மண்டபத்தை தவிர ராஜாஜி நினைவகம், ராஜாஜி அருங்காட்சியகம், காந்தி அருங்காட்சியகம், காந்தி மண்டபம், திறந்தவெளி, கலையரங்கம், மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபம், பக்தவச்சலம் நினைவகம், ரெட்டை மலை சீனிவாசன் மணி மண்டபம் (கட்டப்பட்டு வருகிறது), காமராஜர் நினைவகம் ஆகியவை அமைந்துள்ளன.
தியாகிகள் தினமான இன்று சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணி மண்டபத்துக்கு எதிரில் நிறுவப்பட்டுள்ள தியாகி செண்பகராமன் சிலையை, முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்தார்.
இந்த சிலையின் உயரம் 8 அடி ஆகும். சிலை திறப்புக்குப் பிறகு, தியாகிகள் செண்பகராமன், சங்கரலிங்கனார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications