காந்திக்கு ஏன் நோபல் தரவில்லை?-பரிசுக் குழு தலைவர் விளக்கம்
டாக்கா: மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்க தீர்மானித்திருந்த நேரத்தில் அவர் படுகொலை செய்யபப்ட்டு விட்டதால் பரிசினை வழங்க இயலாமல் போய் விட்டதாக நோபல் பரிசுக் குழுவித் தலைவர் ஓலே டான்போல்ட் மஜாஸ் கூறியுள்ளார்.
அகிம்சையை உலகுக்குப் போதித்த உன்னத தலைவரான மகாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது நீண்ட காலமாகவே சர்ச்சையில் இருந்து வரும் விஷயம். இனவெறி காரணமாகவே காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், மகாத்மாவுக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதுகுறித்து நோபல் பரிசுக் குழுத் தலைவர் மஜாஸ் விளக்கியுள்ளார்.
மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்கள், காந்தியின் அகிம்சையை உலகெங்கும் கொண்டு சென்ற நிலையில், காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு மஜாஸ் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு அவர்அளித்துள்ள பேட்டியில், ஐந்து முறை மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுப் பட்டியலில் இடம் பிடித்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் விருதினை வழங்க இயலவில்லை.
கடைசியாக 1947ம் ஆண்டின் இறுதியில், காந்திக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று ஒருமித்த கருத்து உருவானது. 1948ம் ஆண்டுக்கான விருதினை அவருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த ஆண்டு ஜனவரி மாதம் மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டு விட்டார். இதனால் காந்திக்கு நோபல் பரிசினை அறிவிக்க முடியாமல் போய் விட்டது.
அந்த ஆண்டு யாருக்குமே நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார் மஜாஸ்.
ஆனால் 1961ம் ஆண்டு மரணத்திற்குப் பின்னர் ஐ.நா. முன்னாள் செயலாளர் டாக் ஹம்மர்ஸ்ஜோலெட் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதே. அது மட்டும் எப்படி தரப்பட்டது என்ற கேள்விக்கு மஜாஸிடமிருந்து தெளிவான பதில் வரவில்லை.
அது ஒருமுறை நடந்து விட்டது. ஆனால் இனிமேல் அப்படி நடக்காது என்று மழுப்பலான பதிலை மஜாஸ் தந்துள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications