முத்தமிழ்ச்சுவைச் சுற்ற திருவிழா
குடியாத்தம்: குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் 3 நாள் தமிழ்த் திருவிழா இன்று தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் தொடக்க விழாவுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜி.ஒளிவண்ணன் தலைமை வகிக்கிறார். கேஎம்ஜி கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, நெருப்பு வலம் வந்த நெருப்பு என்ற தலைப்பில் பழ. கருப்பையா பேசுகிறார். மாலை சுகவரிகள் முகவரிகள் ஆவதில் முன்னிற்பவை நாட்டுப் புறப்பாடல்களா அல்லது திரை இசைப் பாடல்களா என்ற தலைப்பில் அரங்க நெடுமாறன் தலைமையில் பண்பாட்டு மன்றம் நடைபெறுகிறது.
நாளை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரணி ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் எ.எ. நடராஜன் தலைமை வகிக்கிறார். வைப்பு நிதி என்ற பொருளில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் பேசுகிறார்.
மாலை தி.மு. அப்துல்காதர் தலைமையில் வாரியாரின் வளர் புகழுக்குக் காரணம் நா அல்ல பேனாவே என்பது குற்றம் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. இரவு அல்லவை தேயவும், அறம் பெருகவும் பெரிதும் தேவை தெளிவா அல்லது துணிவா என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார்தாசன் தலைமையில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை இதழ்ப் பூக்கள் என்ற பொருளில் புலவர் ரெ.சண்முகவடிவேலும், இரவு தமிழோடு வாழ்வோம் என்ற தலைப்பில் நெல்லை கண்ணனும் உரை நிகழ்த்துகின்றனர்.
விழா ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் புலவர் வே.பதுமனார், நிர்வாகிகள் டாக்டர் எம்.எஸ். திருநாவுக்கரசு, டாக்டர் கே.எம். கணேசன், புலவர் ச.தண்டபாணி, ஏ.ஜி.ஆறுமுக முதலியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications