சாதனையாளர்களுக்கு விருது
செங்கல்பட்டு: பாரதி ப்ரியா புத்தக நிலையம், இலக்கிய வீதி இணைந்து சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கியது.
செங்கல்பட்டு பாரதி ப்ரியா புத்தக நிலையம், இலக்கிய வீதி இணைந்து நடத்திய நூல் அறிமுக விழா மற்றும் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை கம்பன் கழகச் செயலர் இலக்கிய வீதி இனியவன் வரவேற்றார். செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி இரத்தினவேல் கணேசன் தலைமை வகித்தார்.
சென்னை கேலக்ஸி கம்யூனிகேஷன் நிர்வாக இயக்குனர் ரரேஷ் பிரபா, 2007-08ஆண்டுக்கான பாரதி ப்ரியா நினைவு விருதுகளை வழங்கினார்.
இலக்கிய வீதி சார்பில் கவிஞர் தாரா பாரதியின் 'கவி ஞாயிறு தாராபாரதி கவிதைகள்' என்ற நூலை திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அறிமுகம் செய்தார்.
தன்னம்பிக்கைக்கான விருது சித்தூர் மாவட்டம் பலமெனர் கிராமத்தைச் சேர்ந்த டி.சுஜாதாவுக்கு வழங்கப்பட்டது. பட்டதாரியான சுஜாதா, இரு கைகளையும் இழந்திருந்தாலும் கால்களாலேயே எழுதுவது வரைவது கோலம்போடுவது மலர் அலங்காரம், கணிப்பொறியை இயக்குவது போன்ற பணிகளை செய்கிறார்.
நேர்மைக்கான வருது சென்னை ஆட்டோ டிரைவர் கே.இராமனுக்கு வழங்கப்பட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தன் ஆட்டோவில் தவறவிட்ட 80 பவுன் நகைகள் மற்றும் காமிராவை சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒப்படைத்து பாராட்டைப் பெற்றார்.
குறள்கள் ஒப்பித்தவர்களுக்கு இதுவரை 30 ஆயிரம் குறள் புத்தகங்களை வழங்கியதற்காக காட்டாங்கொளத்தூர் கருநிலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிஞர் ஆ.ரூபி ரெசினா பாராட்டப்பட்டார்.
பொன்விளைந்த களத்தூரைச் சேர்ந்த ப.ராஜேஷ்குமார் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications