18 வயதில் நாவலாசிரியை ஆன திஷா!

திஷாவுக்கு வயது ஜஸ்ட் 18தான். அதற்குள் எழுத்தில் பிரமிக்க வைக்கிறார். இளம் வயது முதலே டயரி எழதும் பழக்கம் உள்ளவரான திஷா, அந்தப் பழக்கமே தன்னை எழுத்தாளராக்கியதாக கூறுகிறார்.
திஷா எழுதியுள்ள பிங்க் அன்ட் பிளாக் நாவல், டீன் ஏஜ் வயதினர் சந்திக்கும் தடுமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், குழப்பங்கள், கஷ்டங்களை விளக்குகிறது.
பிங்க் ஆர் பிளாக், தனது எழுத்து, டயரி பழக்கம் குறித்து திஷா கூறுகையில், 6 வயது முதலே நான் டயரி எழுதி வருகிறேன். 16 வயதாக இருக்கும்போது முறைப்படி எழுத ஆரம்பித்தேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த அனுபவங்கள், குழப்பங்கள், பயம், நம்பிக்கை, நட்புகள், என்னைப் போன்ற டீன் ஏஜ் வயதினர் சந்திக்கும் விஷயங்கள் எல்லாமாக சேர்ந்து என்னை மேலும் எழுதத் தூண்டின.
இவை அனைத்தும் இப்போது பிங்க் ஆர் பிளாக் என்ற நூலாக மலர்ந்துள்ளது. டீன் ஏஜ் வயதில் நாம் சந்தித்த, சந்தித்து வரும் பிரச்சினைகளை திரும்பிப் பார்க்க வைக்கும் நூலாக இது அமைந்திருக்கிறது.
இந்தப் பருவம் மிகவும் முக்கியமான கால கட்டம். இந்த வயதில் நாம் எடுக்கும் முடிவுகள்தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. அப்போது எப்படி நாம் செயல்பட வேண்டும். நமது மனது சொல்படி நடக்கலாமா, கூடாதா, அட்வைஸ்களை ஏற்கலாமா, கூடாதா என்பது குறித்து நமக்கு குழப்பம் ஏற்படும். அவற்றுக்கெல்லாம் இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
இந்தக் கதையின் நாயகி டியானா. இவள் சந்திக்கும் காதல், சஞ்சலங்கள், பதட்டங்கள், தோழர்கள், பேஷன் உள்ளிட்ட அனைத்துமே ஒவ்வொரு டீன் ஏஜ் பெண்ணும் சந்தித்த, சந்திக்கும் அனுவபங்களின் பிரதிபலிப்புதான்.
டீன் ஏஜ் வயதில் நாம் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது, தளர்ந்து போய் விடக் கூடாது, தைரியத்துடன் எதையும் சந்திக்க வேண்டும் என்பதுதான். இது எனது அனுபவமும் கூட என்கிறார் திஷா.
இந்த நூலை ரூபா வெளியிட்டுள்ளது. இந்த நூலின் வெளியீடு மும்பையில் நேற்று நடந்தது. பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், நூலின் முதல் பிரதியை வெளியிட்டார்.
எழுத்தாளினியாக வளர்ந்துள்ள திஷாவின் அடுத்த இலக்கு சினிமா. நியூயார்க் பிலிம் அகாடமியில் சேர்ந்து இயக்குநருக்கான பயிற்சியைப் பெறப் போகிறாராம்.
அடிப்படையில் நான் ஒரு கதை சொல்லி. அது புத்தகமாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, கதை சொல்வதுதான் எனக்கு வசதி. எனவேதான் சினிமாவில் இயக்குநராக விரும்புகிறேன் என்கிறார் அழகிய புன்னகையுடன்.
கீப் இட் அப் திஷா!
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications