அபிராமி மெகா மாலில் பனி கொலு!
இவற்றைத் தவிர ஷாப்பிங் செய்ய வசதியாக ஏராளமான கடைகளும் உள்ளன.
இப்போது நவராத்திரி சீஸன்.
இதை வித்தியாசமாகக் கொண்டாடும் வகையில் பனி கொலு ஒன்றை அபிராமி மெகாமால் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பனி கொலுவில் கணபதி, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, சிவபெருமான்-பார்வதி போன்ற கடவுள்களின் சிலைகள் வைக்கபட்டுள்ளன.
முழுக்க முழுக்க பனிக் கட்டியிலேயே செய்யப்பட்ட இந்தச் சிலைகளை ஸ்னோ வேர்ல்டில் வைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் கொலுவில் நிறுத்தி வைத்துள்ளனர். பனி கொலுவுக்கு வரும் பெரியவர்கள் இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வாங்கியிருந்தால் ஒரு சிறிய டவலும், குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கப்படும்.
மேலும், இன்று செவ்வாய்க் கிழமை அபிராமி மாலின் மையப் பகுதியில் உள்ள எகிப்து தேவதை சிலை மேடையில் உற்சவத்துடன் நவராத்திரி சிறப்புக் கொலு துவங்குகிறது. இந்தக் கொலு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் இந்தக் கொலுவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜை நேரத்தில் கொலுவுக்கு வரும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை அபிராமி மெகா மால் அதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன், இயக்குநர் நல்லம்மை ராமநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications