நெல்லையில் விநோத மனிதர்கள்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் வெள்ளான்குளத்தில், ஒரு குடும்பத்தினரை வித்தியாசமான நோய் பீடித்துள்ளது. இதனால் அவர்கள் குரங்கு உருவத்தில் காணப்படுகின்றனர்.

ஓவர் டூ வெள்ளான்குளம் ...

திருநெல்வேலிக்கு அருகேயுள்ளது அபிஷேகபட்டி. இங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெள்ளான்குளம். சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கும் 4 தெருக்கள். ஊரைசுற்றி கருவேல முள் மரங்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் வெள்ளான்குளம். பாரதி ராஜா படத்தில் வருவது போல் ஒயிலான ஓலைக்குடிசை... உள்ளே நுழைந்து பார்ப்பவர்கள் சற்றே விதிர்த்துப் போவார்கள். காரணம் அங்கு வசிப்பவர்களின் தோற்றம்.

அந்த வீட்டிற்குள் வசித்து வருகிறார்கள் குரங்கு போலவே சாயல் கொண்ட 2 மனிதர்கள். ஒருவர் ஆறுமுகம். மற்றொருவர் அவரது அண்ணன் பெருமாள். 40 வயதை கடந்து விட்ட இவர்கள் இருவருமே மனவளர்ச்சி குன்றியவர்கள்.

4 1/2 அடி உயரத்தில் சற்று கூன்போட்ட முதுகுடன் உடலுக்கு சம்பந்தமில்லாமல் முற்றிலும் இவர்கள் முகம் உள்ளது. நாம் பொருட்களை கொடுக்கும்போது வெடுக்கென குரங்கு போலவே பறிக்கிறார்கள்.

நாம் சொல்லும் ஒரு சில செயல்களை மட்டுமே அவர் புரிந்து கொள்கிறார். மற்றபடி ஆறுமுகத்திற்கு எதுவும் தெரியாது.

யாராவது பிஸ்கட் அல்லது மிட்டாயை காட்டிவிட்டால் குதிபோட்டு ஓடி அதை லபக் என்று பிடித்துக் கொள்கிறார். அதே சமயத்தில் ஆறுமுகத்திற்கு கோபம் வந்தால் பிராண்டி கடித்து குதறி விடுவாராம்.

பெருமாள் மூத்தவர் என்பதாலோ என்னவோ சற்று பேசுகிறார். நம் செய்யும் செயலை அப்படியே செய்கிறார். இவர்களது தாய், தந்தை கைராசி கோனாரும், பார்வதியம்மாளும் மரணம் அடைந்துவிட்டனர். இவர்களின் கடைசி தங்கை மாரியம்மாளும், அவரது கணவர் பொன்னையாவும் தான் கஷ்டமான சூழ்நிலையிலும் தற்போது தாயும், தந்தையுமாக இருந்து கவனித்து வருகின்றனர்.

இவர்களது உலகமே வெள்ளான்குளத்தில் உள்ள 4 தெருக்களும், ஆடு மேய்க்கும் காடுகளும்தான்.

சாபம் - ஒரு பிளாஷ் பேக் ...

தெருக்களில் அலைந்து திரிந்து பிறர் கொடுப்பதை வாங்கி சாப்பிடும் இந்த விநோத மனிதர்களுக்கு பின்னால் அனுமார் சாபம் என்ற பெரிய பிளாஷ்பேக் கதை உள்ளது.

இவர்களது தந்தை நம்பி வாலிப வயதில் ஏராளமான ஆடுகள் வளர்த்து ஊர் ஊராக சென்று ஆட்டு கிடாய் போடுவாராம். அதுபோல கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டுகிடாய் போட்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட வைத்திருந்த பழைய கஞ்சி சோற்றை இரண்டு குரங்குகள் வந்து பங்கு போட்டு தின்று விட்டன.

ஒருநாள், இரண்டு நாள் அல்ல பலமுறை சாப்பாட்டை குரங்குள் சாப்பிட்டதால் பட்டினியாக இருந்த நம்பிக்கு கோபம் வந்துவிட்டது. அந்த குரங்குகளை கொல்ல சாப்பாட்டில் கருக்கு மட்டை துண்டுகளை ஏராளமான மிளகாய் துளையும் போட்டு வைத்து விட்டார்.

வழக்கம் போல் சாப்பிட வந்த குரங்குகள் சாப்பாட்டை அள்ளி தின்றபோது கருக்கு மட்டை துண்டால் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

சாப்பாட்டில் உள்ள மிளகாய் தூள் காயத்தில் பட்டு குரங்ககுகளுக்கு பயங்கர வேதனையை கொடுத்தது. இதை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்த நம்பி ஓடோடி வந்து கருக்கு மட்டையால் குரங்குகளை அடித்து ரத்தகளறியாக்கினார். தப்பி ஓடிய இரண்டு குரங்குகளும் அணு அணுவாக துடித்து 2 நாட்கள் கழித்து இறந்து விட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நம்பிக்கு திருமணாகி முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குரங்கு உருவில் இருந்தது. இதனால் கொஞ்சி பால் கொடுக்க வேண்டிய பார்வதி அம்மாள் பயந்து போய் குழந்தைக்கு பால் கொடுக்கவே இல்லை.

சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்தது. அதற்கு பிறகு 2 மகன்களும், 1 மகளும் பிறக்க அவர்களும் குரங்கு போலவே இருந்து சின்ன வயசிலேயே இறந்து போனார்கள்.

இதனால் நம்பியும், பார்வதியும் பல கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விரதம் இருந்துள்ளனர்.

அதன்பிறகுதான் தற்போது உயிரோடு இருக்கும் பெருமாளும், அவரது தம்பி ஆறுமுகமும் குரங்கு போல் பிறந்து உயிரோடு உள்ளனர். குழந்தைகள் அனைத்தும் குரங்குபோல் பிறந்ததால் இது அனுமார் சாபம் என்று கூறியுள்ளனர்.

இதை போக்க ஏற்கனவே சித்ரவதை செய்த குரங்குகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி உருவம் செய்து அனுமான் கோயிலில் வைக்க வேண்டும் என்று ஒரு குறி சொல்பவர் கூறி உள்ளார். அதன்படி நம்பியும், பார்வதியும் கல்லில் குரங்கு சிலை செய்து அதற்கு சிறப்பு வழிபாடு செய்து பாபநாசம் கோயிலில் கொண்டு வைத்துள்ளனர்.

அதன்பிறகு நம்பிக்கும், பார்வதிக்கும் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த 3 பேரும் சாதாரண குழந்தைகளை போலவே பிறந்துள்ளனர். இது இறைவனின் திருவிளையாடல் என்று அந்த கிராமமே வியந்துள்ளது.

அரசின் உதவிக்கரம்:

தற்போது உலகம்மாள், செண்டு, ஆகிய இரண்டு பேரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். மாரியம்மாள் என்ற கடைசி தங்கை அண்ணைகளை பாசத்தோடு பராமரித்து வருகிறார்.

சரியாக உண்ண உணவு இல்லாமலும், உடுத்த இல்லாமல் ஆறுமுகமும், பெருமாளும் அவதிப்படுவதை பார்த்து அங்கு வந்தவர் ஒரு 100 ரூபாயை பெருமாள் கையில் கொடுத்தார்.

அதை வாங்கி பத்திரப்படுத்திய பெருமாள் தம்பிக்கு சட்டை வாங்கி கொடுக்கனும் என்ற அரைகுறை தமிழில் கூறியது அனைவரது கண்களையும் கண்ணீர் கசிய வைத்தது.

இவர்களுக்கு மாதம் ரூ.700 உதவி தொகை வழங்கி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

சாபமோ, பாவமோ, மனிதாபிமானத்தை சற்றே இவர்கள் மீது சரமாரியாக பொழிந்தால், நிச்சயம் இவர்களும் சக மனிதர்களைப் போல நடை போட முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+