ஈரோடு மருத்துவமனையில் ஒரே நாளில் 20 சோதனைக் குழாய்கள்

ஈரோட்டில் உள்ளது சுதா ஹை டெக் ஐவிஎப் மருத்துவமனை. இங்குதான் இந்த சோதனைக் குழாய் சாதனை நடந்துள்ளது.
சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி நாள் மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பிரசவிக்க பெண்கள் விரும்பியதால் அன்றே 20 பேருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன.
இவர்களில் 58 வயது விவசாயி கோவிந்தசாமியின் 51 வயது மனைவி சரோஜா தேவியும் ஒருவர். சரோஜாவுக்கு சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
பல வருடங்களாக காத்திருந்த இவர்களுக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைக் கனவு நனவாகியுள்ளது.
இந்த மருத்துவமனை மூலம் சோதனைக் குழாய் மூலம் பிரசவித்த 20 பெண்களும், அக்டோபர் 30ம் தேதியன்று தங்களுக்கு பிரசவம் நடக்க வேண்டும் என்று விரும்பியதால் அறுவைச் சிகிச்சை மூலம் அனைவருக்கும் அன்றே பிரசவம் நடத்தப்பட்டது.
இருப்பினும் இதை பெரிய அளவில் சாதனையை தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை என்று மருத்துவமனை இயக்குநர் டாக்டர் தனபாக்கியம் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 12 பெண்களுக்குப் பிரசவம் பார்த்தேன். அக்டோபர் 30ம் தேதியே குழந்தை பிறக்க வேண்டும் என 20 பெண்கள் விரும்பியதால், அன்று நடத்தப்பட்டது என்றார்.
இவர் பிரசவம் பார்த்த 12 தாய்மார்களில், 8 பேருக்க இரட்டைக் குழந்தைகள் பிறன்தன.
பல வருட காத்திருப்புக்குப் பின்னர் தந்தை ஆகியுள்ள விவசாயி கோவிந்தசாமி கூறுகையில், நாங்கள் மிகவும் விரக்தியான கட்டத்தில்தான் இந்த மருத்துவமனைக்கு வந்தோம். தற்கொலைக்குக் கூட முயன்றோம். எனது மனைவி தாயாவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த நம்பி்க்கையே போய் விட்டது.
ஆனால் இப்போது கடவுள் எங்களுக்கு 2 குழந்தைகளைக் கொடுத்துள்ளார் என்றார்.
சரோஜாதேவிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என பல உடல் உபாதைகள் இருந்தபோதிலும் அவருக்குப் பிறந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக, தலா 2.4 கிலோ எடையுடன் உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் டாக்டர் தனபாக்கியம் 1000 சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு பிரசவம் பார்த்துள்ளாராம்.
அக்டோபர் 30ம் தேதியன்று காலை 5 மணிக்கு தொடங்கிய பிரசவம் பார்க்கும் படலம் இரவு 10 மணி வரை நீண்டுள்ளது.
அன்று பிரசவத்திற்கு உட்பட்ட தாய்மார்கள் 35 வயது முதல் 51 வயது வரை உடையவர்கள்.
பிரசவித்த தாய்மார்களில் 12 பேர் அன்றைய தினமே வீடு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications