மைக்ரோசாப்ட் தேர்வில் மதுரை சிறுமியின் மெகா சாதனை
மதுரை: மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் புரபஷனல் சான்றிதழ் (எம்.சி.பி.) தேர்வில் மதுரையைச் சேர்ந்த 8 வயது லவீனாஸ்ரீ தேர்வு பெற்று, உலக சாதனை படைத்துள்ளார். இந்த சான்றிதழை மிகக் குறைந்த வயதில் பெரும் நபராக சாதித்துள்ளார் லவீனா.
லவீனாவுக்கு வயது 8 தான் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 1000 மதிப்பெண்களில், லவீனா 842 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
மதுரை டால்பின் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து வரும் லவீனாவுக்கு கடந்த வாரம் எம்.சி.பி. சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னைக்கு தனது பெற்றோருடன் வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்து அவரிடமும் ஆசி பெற்றார் லவீனா.
இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுமியான ஹர்பக்கரீம் ரன்தாதா என்ற சிறுமிதான் குறைந்த வயதில் எம்சிபி சான்றிதழைப் பெற்ற சாதனையை வைத்திருந்தார். தற்போது லவீனா அதை முறியடித்துள்ளார்.
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் இந்தத் தேர்வில் வழக்கமாக 20 முதல் 25 வயது வரையிலானவர்களே கலந்து கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் லவீனா இந்த தேர்வை தைரியமாக சந்தித்து, சாதனையுடன் வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடிதம் மூலமாகவோ, தொலைபேசியிலோ அல்லது நேரிலோ வாழ்த்து தெரிவிப்பார்.
லவீனாவுக்கு சாதனை புதிதல்ல. ஏற்கனவே 3 வயதாக இருக்கும்போதே, 1330 திருக்குறள்களையும் மனப்பாடமாக ஒப்பித்து, தேசிய விருது பெற்றுள்ளார். அத்தோடு, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications