முனைவர் பொற்கோவுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது

தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டு மேன்மைக்கும் பாடுபட்டு வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைப்பவர்களை தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் தமிழக அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டிற்கான (2008) தந்தை பெரியார் விருது இயக்குனர் ஞான. ராஜசேகரனுக்கும், அறிஞர் அண்ணா விருது அ.மறைமலையானுக்கும், அம்பேத்கர் விருது எழுத்தாளர் சோலைக்கும்,
பெருந்தலைவர் காமராசர் விருது கோபண்ணாவுக்கும், பாரதியார் விருது முனைவர் இரா. மணியனுக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முனைவர் ச.பா.அருளானந்தத்துக்கும்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் பழமலய்க்கும் வழங்கப்படுகிறது.
2009ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது முனைவர் பொற்கோவுக்கு வழங்கப்படுகிறது.
விருது பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பொற்கிழியுடன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.
வரும் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications
