2008ன் முக்கிய சம்பவங்கள்!

2008ம் ஆண்டின் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஈராக்கில் கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்த்து உலகமே அரண்டு போனது.
பதவிக் காலத்தை முடிக்கும் புஷ், அதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் செல்ல விரும்பினார். அதன்படி டிசம்பர் 15ம் தேதி பாக்தாத்துக்கும் சென்றார்.
பாக்தாத் அதிபர் அப்பாஸை சந்தித்த புஷ், அவருடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். அங்குதான் புஷ்ஷுக்கு அவமரியாதை நேர்ந்தது.
நிருபர்களுடன் அமர்ந்திருந்த ஈராக் டிவி நிருபர் முன்டாசர் அல் ஜெய்தி, தனது ஷூக்களை எடுத்து ஆவேசமாக கத்தியபடி புஷ் மீது எறிய, படு லாவகமாக குனிந்து ஷூ வீச்சிலிருந்து தப்பினார் புஷ்.
அமெரிக்கா உள்பட உலகமே இதைப் பார்த்து அதிர்ந்து போனது. ஆனால் ஷூவை வீசிய முன்டாசரோ, அரபு நாடுகளின் நாயகனாகி விட்டார்.
அவருக்கு உலகின் பல்வேறு முஸ்லீம் நாடுகளிலிருந்தும் பரிசுகள் குவிந்தன. லிபிய அதிபர் கடாபியின் மகள், முன்டாசரை மாவீரன் என்று புகழ்ந்தார்.
முன்டாசர் வீசிய ஷூவைத் தயாரித்த எகிப்து நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் அதே டைப் ஷூக்களைக் கேட்டு ஆர்டர்கள் குவி்ந்தன. முன்டாசரின் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் ஷூக்களை இலவசமாக சப்ளை செய்வதாக பல நிறுவனங்கள் அறிவித்தன.
பதவியிலிருந்து விலகும் நேரத்தில் கிடைத்த இந்த வரவேற்பை நிச்சயம் புஷ் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்பது நிச்சயம்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications