சென்னையில் புத்தக விழா

சென்னையில் பிரமாண்ட புத்தக விழா ஜனவரி 4ம் தேதி முதல் 17ம் தேதி சென்னை புத்தக விழா நடைபெறுகிறது.
சென்னையில் ஆண்டுதோறும் புத்தக விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தக விழாவை முதல்வர் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த மாபெரும் புத்தக விழாவில் ஏராளமான புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
இந்த விழாவில் பங்கேற்கும் நியூ ஹாரிசன் மீடியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், தமிழ் பதிப்புலக வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் ஒரே தலைப்பிலான மூன்று நூல்களை வெளியிடுகிறது.
'I am vidya' என்று பெயரிடப்பட்ட இந்த நூல், ஒரு அரவாணியின் கதையைச் சொல்லும் நூலாகும். அரவாணி வித்யாவே எழுதியுள்ள இதை எழுதியுள்ளார். கடந்த ஒரு வருடமாக லிவிங்ஸ்மைல் வித்யா என்ற பெயரில், livingsmile.blogspot.com என்ற பிளாக்கிலும் வித்யா எழுதி வருகிறார்.
ஒரு என்ஜிஓவாக செயல்பட்டு வரும் வித்யா, இந்த நூலில் தான் சந்தித்த பிரச்சினைகள், அவமானங்கள், வேதனைகளை விளக்கியுள்ளார். இந்தியாவில் அரவாணிகள் சந்திக்கும் அவமானங்களையும், பிரச்சினைகளையும், போராட்டங்களையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
சென்னை புத்தக விழாவில் இந்த நூல் வெளியீட்டுக்கு வருகிறது. அதேபோல கார்ட்டூன் கலைஞர் மதியின் 6 தொகுப்புகள் அடங்கிய கார்ட்டூன் தொகுப்பும் வெளியிடப்படவுள்ளது.
இதுதவிர வாட் குறித்த நூல்கள், மியூச்சுவல் பண்ட் குறித்த நூல்கள் உள்ளிட்டவையும் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
ஆடியோ நூல்கள்
தமிழில் முதல் முறையாக ஆடியோ நூல்களும் சென்னை புத்தக விழாவில் வெளியிடப்படவுள்ளன.
புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேவன், முத்துலிங்கம், இரா. முருகன், சுப்ரமணிய ராஜு ஆகியோரின் நூல்கள் ஆடியோ வடிவில் நூல்களாக வடிவெடுத்து, சென்னை புத்தக விழாவில் வெளியிடப்படவுள்ளன.
சிறுகதைகளைப் படிப்போர் அருகி வருகின்றனர். ஆனால் ஆடியோ நூல்கள் இந்தக் குறையைத் தீர்த்து படிப்போரின் எண்ணிக்கையை பெருக்கும் என்ற நம்பிக்ைக இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் நம்பிக்ைக தெரிவிக்கின்றனர்.
இதுதவிர 20 பிரபல தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த நூல்களும் இந்த விழாவில் வெளியிடப்படவுள்ளது. விரைவில் இவற்றை மலையாளத்திற்கும் கொண்டு செல்ல நியூ ஹாரிசன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர சென்னை புத்தக விழாவில், நியூ ஹாரிசன் நிறுவனம் சார்பில் இடம் பெறும் பிற முக்கிய நூல்கள்:
1. The Ghosts of Arasur - Arasur Vamsam ( Era. Murugan )
2. Sons of the sun - Suriya vamsam ( Sa. Kandasamy)
3. Blood Ties - Rathha vuravugal(Yuma Vasugai )
4. Lizzy's Legazy - Putham veedu (Hephzibah Jesudasan)
புத்தகப் பிரியர்களாக இதுவரை மாறாதவர்கள் சற்றே இந்த விழாவுக்கு ஒரு விசிட் அடித்தால், நிச்சயம் புத்தக வெறியர்களாக மாறக் கூடும். அந்த அளவுக்கு மிகப் பெரிய புத்தகத் தொகுப்புகளுடன் இந்த புத்தக விழா நடைபெறவுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications