திருவையாற்றில் தமிழிசை விழா!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் ஜனவரி 15ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழிசை விழா நடக்கிறது.
தமிழிசை மன்றத்தின் சார்பில் நடக்கும் இந்த 37வது தமிழிசை விழாவில் இசைக் கலைஞர்கள், தமிழிசை பாடகர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜனவரி 15ம் தேதி மாலை 4.30க்கு கல்யாணபுரம் கணேசன் குழுவினரின் பெருவங்கியம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.
விழாவிற்கு தமிழிசை மன்ற தலைவர் ஆறுமுக கொன்ன முண்டார் தலைமை வகிக்கிறார்.
வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாறு வாண்டையார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் விழாவை துவங்கி வைத்து பேசுகின்றனர்.
விழாவில் மத்திய இணை அைமச்சர் பழனி மாணிக்கம் இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications