பாரதியை தீவிரவாதி என்று ஒதுக்கிய சமூகம் இது!-கவிஞர் புவியரசு
கோவை: தொலைநோக்குச் சிந்தனையுடன் பாடிய பாரதியை இன்று மகாகவி என்கிறோம். ஆனால் அன்று அவரை தீவிரவாதி என ஒதுக்கியது ஒரு கூட்டம் என்றார் கவிஞர் புவியரசு.
கோவை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சாயிபாபா காலனி பாரதி பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பேசியது:
உயிர் பெற்ற தமிழ்ப் பாட்டு என்னும் கவிதையில் ஊருக்கு உழைப்பவர்களே சிறந்தவர்கள் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார். தொலைநோக்கு சிந்தனையுடன் கவிதைகளை எழுதியுள்ளார்.
அப்படிப்பட்ட தேசிய கவிஞர் பாரதியை, அன்றைய தேசிய இயக்கத்தினர் தீவிரவாதி என ஒதுக்கியது ஒரு சோக வரலாறு.
பாரதிக்கும், வள்ளலாருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன. தேசியத்தை மையமாக வைத்தே பாரதி கவிதைகளை எழுதியிருந்தாலும், சமூக பிரச்னைகள், சாதி வேறுபாடுகளை கடுமையாக சாடியுள்ளார், என்றார் புவியரசு.
பின்னர் பாரதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பாலகிருஷ்ணன், மாநகராட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் குழுத் தலைவர் புருஷோத்தமன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் பெ.சிதம்பரநாதன், செயலர் ப.பா.ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications