ஐயப்ப பக்தர்களுக்கு இடமளிக்கும் மசூதி

மதம்உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒற்றுமை, அன்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை மட்டுமே போதித்த போதிலும், அந்த மதங்களை பின்பற்றும் சில மனிதர்கள் மட்டும் அப்பாதையில் இருந்து விலகி நடக்கின்றனர். இதனாலேயே மதத்தின் பெயரால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் மதவேறுபாடுகளைக் களைந்து ஒருவருக்கொருவர் அரவணைத்துக் கொள்ளும் பாங்கையும் பல இடங்களில் காண முடிகிறது.
சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் சபரிமலையில் உள்ள வாவர் மசூதிக்குச் சென்று வழிபடுவதும், அந்த மசூதியில் பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்பட்டு வருவதும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இதேபோல், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, திருச்சூர் அருகே உள்ள சூண்டல் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மசூதியில் தங்க இடம் கொடுத்து, பணிவிடைகள் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம்.
திருச்சூர் அருகே குண்ணங்குளம் ரோட்டில் அமைந்து உள்ளது இந்த சூண்டல் பகுதி. இங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜூம்மா மசூதி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக எந்நேரமும் திறந்திருக்கிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடையாக, வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த மசூதியில் இளைப்பாறி விட்டுச் செல்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி, குழுவாக வருவோர்களுக்கு சமையல் செய்வதற்கு இடவசதி போன்றவற்றை இந்த மசூதியின் நிர்வாகம் செய்து கொடுக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications