நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் கரிசல் திருவிழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து பல்கலைக்கழக தகவல் தொடர்புத்துறை தலைவர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையி்ல்,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்புத்துறை மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதற்காக கரிசல் திருவிழா-2009 என்ற போட்டி 3வது முறையாக நடத்தப்படுகிறது.
சிறப்பு அழைப்பாளர்களாக பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தி.சபாபதி மோகன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 30 கல்லூரிகளைச் சேர்ந்த தகவல் தொடர்புத்துறை மாணவ-மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டோகிராபி, டாக்குமெண்டரி, குறும்படம், விளம்பரம் உள்பட 8 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போட்டி நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். அதிக புள்ளிகள் பெற்று வரும் கல்லூரிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மனோ மீடியா கிளப் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications