தீண்டாமைக்கு குட்பை சொன்ன கிராமத்துக்கு ரூ. 1லட்சம் பரிசு

மதுரை மாவட்டம் பேரையூர் தாலூகாவில் பழையூர் கிராம ஊராட்சி உள்ளது. இதில் கரிசல்பட்டி, கட்டாரப்பட்டி ஆகிய உள் கிராமங்கள் அடங்கியது.
இங்கு ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர், பிற்பட்ட மற்றும் இதர வகுப்பினர் 368 குடும்பங்களைச் சேர்ந்த 2117 பேர் வசிக்கின்றனர்.
இந்த ஊரில் போய் தீண்டாமை என்ன என்று கேட்டால் அங்குள்ள மக்கள் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு இங்கு சமத்துவம் கொடி கட்டிப் பிறக்கிறது.
ஆதி திராவிட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், பிற சமூகத்தைச் சேர்ந்த மக்களுடன் கலந்து கோவில் திருவிழாவின்போது அனைவரும் சம்மாக பொங்கலிட்டு வழிபடுவது, மற்ற பொது விழாக்களிலும் பாகுபாடின்றி கலந்து கொண்டு ஒற்றுமையுடன் இருப்பது, ஒரே மயானம் பயன்படுத்திக் கொள்வது என்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இக்கிராம மக்களின் வளர்ச்சிக்காக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ 1 லட்சம் பரிசாக தமிழக அரசு வழங்கியுள்ளது. பழையூர் கிராம ஊராட்சித் தலைவர் வை.பாண்டியன் இந்த மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்கிறார்.
ஊர் மக்களின் சார்பாக ஊராட்சி தலைவர் வை. பாண்டியனிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.சீத்தாராமன் வழங்கினார்.
இந்த பரிசு வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாவட்டத்திற்கு வழங்கப்படும். இந்த வருடம் தீண்டாமை அறவே இல்லாமல் ஒழித்துக்கட்டி, நல்லிணக்கத்துடன் வாழும் பழையூர் கிராம மக்களுக்கு 2008 -2009-க்காக வழங்கப்பட்டது.
இதே பேரையூர் அருகேதான் தீண்டாமையால் பிளவுபட்டிருக்கும் உத்தப்புரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது - வேதனையுடன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications