தமிழக சுற்றுலா துறைக்கு தேசிய விருது
சென்னை: சிறந்த சுற்றுலா துறைக்கான தேசிய விருது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழக சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-07ம் ஆண்டுக்கான விருதை தமிழக சுற்றுலாத் துறை வென்றிருந்தது. இந் நிலையில் 2007-08ம் ஆண்டுக்கான விருது நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்விருதை தமிழக சுற்றுலாத்துறை பெற்றுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை ஆணையர் ராஜாராம் ஆகியோரிடம் இந்த விருதை வழங்கினார்.
கடந்த 2007-08ல் தமிழக அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறந்த விளம்பரங்கள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளை மேற்கொண்டதால் இவ்விருது கிடைத்துள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழக சுற்றுலாத்துறை பசுமைசார் சுற்றுலா, சுற்றுப்புற சுற்றுலா போன்றவற்றில் அதிக அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 17.53 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 5.06 கோடியாக இருந்தது.
அதே போல சிறந்த இரண்டு நட்சத்திர ஹோட்டலுக்கான தேசிய விருதை சென்னை எழும்பூரில் உள்ள பாண்டியன் ஹோட்டல் பெற்றுள்ளது.
இந்த விருதினை, பாண்டியன் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் மனோராஜ் மற்றும் அவரது மனைவி நீதா மனோராஜ் ஆகியோர் ப.சிதம்பரத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications