தமிழ்மகனுக்கு சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை பரிசு
சென்னை: கடந்த ஆண்டு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக நடத்தப்பட்ட அறிவியல் புனைகதை போட்டியில் எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
தமிழில் அறிவியல் புனைகதைகளின் முன்னோடியாக திகழ்ந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் ஆண்டு நினைவு தினமான இன்று அனுசரிக்கப்படுகறது.
இதையடுத்து அவரின் நினைவாக அறிவியல் புனைகதை போட்டி ஒன்று அவரது குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தியது.
இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.
அதன்படி, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய கிளாமிடான் என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெளஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசுகளை பெற்றனர்.
பரிசளிப்பு விழா வரும் மார்ச் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதல் பரிசு பெற்றுள்ள தமிழ்மகன் (43), தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் பா.வெங்கடேசன்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications