மார்ச் 22ம் தேதி திருவரங்கம் கோவில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருவரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் மார்ச் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது.
திருக்கோவிலூரை அடுத்துள்ள திருவரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக் கடந்த சில மாதங்களாக கோவில் திருப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதையடுத்து தீர்த்ததாரர் வி.சம்பத்குமார், முத்துக் குமாரசாமி, திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோர் திருப்பணி வேலைகளை செய்து முடித்துள்ளனர்.
இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என தெரிகிறது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணி தொண்டர் குழுவினர் விழா செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications