திருநெல்வேலி எழுச்சி.. இன்று 101வது ஆண்டு தினம்

சுந்திர போராட்டத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வீர வாஞ்சிநாதன், ஆகியோர் சுதந்திர போராட்டத்தை பல்வேறு தளங்களில் கொண்டு சென்ற மாபெரும் வீரர்கள் ஆவர்.
தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவை கொண்டாடி விட்டு நெல்லை வந்த வஉசி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் 1908ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதனால் நெல்லையில் மாபெரும் போராட்டம் வெடித்தது. பெரும் கலவரம் மூண்டது. மறுநாள் நடந்த மோதலில் நெல்லை நகராட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது. ஆவணங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. முன்சீப் கோர்ட் போலீஸ் நிலையம் தாக்கப்பட்டது. கலவரத்தை கட்டுபடுத்த போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் கலவரம் பரவியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 37 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த திருநெல்வேலி எழுச்சி போராட்டம் அதன் பின்னர் நடந்த சுதந்திர போராட்டத்திற்கு உந்துகோலாக இருந்தது. இதனை நினவை கூறும் வகையில் திருநெல்வேலி எழுச்சியின் 101வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications