காந்தியடிகளின் சுயசரிதையைப் படிக்கும் கஸாப்
Subscribe to Oneindia Tamil

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார் கஸாப்.
மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையான எனது சத்திய சோதனை நூலின் உருதுப் பிரதியை வாங்கி சிறையில் படித்து வருகிறாராம் கஸாப்.
இதுகுறித்து மும்பை சர்வோதய மண்டல் காந்தி புத்தக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமையா இதுகுறித்துக் கூறுகையில், தங்களை சீர்திருத்திக் கொள்ளவும், திருந்துவதற்காவும் காந்தியடிகளின் நூல்களை கைதிகளுக்கு வழங்குவது வழக்கம்.
இந்த நிலையில் காந்தியடிகளின் சத்தியசோதனை நூலின் உருதுப் பிரதி வேண்டும் என கஸாப் கேட்பதாக சிறை அதிகாரிகள் எங்களிடம் கூறினர். இதனால் உருது நூலை கஸாபுக்கு வழங்கினோம்.
காந்தியடிகளின் சுயசரிதை கஸாப்பின் மனதை மாற்றும், தான் செய்த செயலுக்காக அவன் வருந்துவான் என நாங்கள் நம்புகிறோம் என்றார் சோமையா.












Click it and Unblock the Notifications