மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்க் கருத்தரங்கம்
மதுரை: மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியும் இலக்கியப் பேச்சாளருமான கோ.பாலச்சந்திரன் என்றும் தமிழ் எனும் தலைப்பில் பேசினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்மொழிப் புலத்தின் இக்கால மொழியியல் துறையின் முன்னாள் தலைவர் சு.வேங்கடராமன், தமிழில் சமய இலக்கியங்கள் எனும் தலைப்பில் பேசினார்.
தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்றவற்றில் அமைந்துள்ள பக்திச்சுவை பற்றியும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி இலக்கியத்துக்கு ஆற்றியப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
யாதவர் கல்லூரி வணிகவியல் துறை உயராய்வு மையத் தலைவர் க.அழகுசுந்தரம் காலத்தின் தேவை எனும் பொருளில் பேசினார்.
ஆங்கிலத்தில் மாணவர்கள் பேச வேண்டிய அவசியம், தொடர்ந்து படிக்கும் பழக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, மனிதநேயம், தன்னம்பிக்கை, முயற்சி ஆகியவற்றின் தேவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
மாணவி இரா.ஜெயசித்ரா, வள்ளுவர் கண்ட அரசியல் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் உயராய்வு மையத் தலைவர் வீ.மோகன் வரவேற்றார். மாணவர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications