இலங்கை தமிழ் மாஜிஸ்திரேட்டுக்கு அமெரிக்காவின் தீரப் பெண் விருது
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த தமிழ் நீதிபதிக்கு, அமெரிக்காவின் தீரப் பெண்மணி (உமன் ஆப் கரேஜ்) விருது கிடைத்துள்ளது.
அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விருதினை அளித்துள்ளது. இலங்கையில், துணிச்சலுடனும், திறமையுடனும், தைரியத்துடனும் செயல்பட்டு வருவதற்காக இந்த விருது அந்த பெண் தமிழ் நீதிபதிக்குக் கிடைத்துள்ளது.
விருது பெற்றுள்ள நீதிபதியின் பெயர் ஸ்ரீநிதி நந்தசேகரன். விருது பெற்ற ஸ்ரீநிதி குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறுகையில்,
ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இணைந்து திறமையுடன் செயல்படும் பெண்மணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உமன் ஆப் கரேஜ் விருதினை அளித்து வருகின்றன.
இந்த ஆண்டு பல உலக நாடுளைச் சேர்ந்த 80 பெண்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. மனித உரிமை முதல் பெண்களின் பிரச்சினைகள் வரை பல்வேறு பிரிவுகளில் திறமையுடன் செயல்படக் கூடிய பெண்கள் இவர்கள்.
இவர்களில் ஸ்ரீநிதி நந்தசேகரன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதும் சிறந்த வக்கீலாகவும், இப்போது நீதிபதியாகவும் திறம்பட, தைரியத்துடனும், துணிவுடனும் பணியாற்றி வருகிறார் ஸ்ரீநிதி.
இலங்கையின் அனைத்து இனப் பிரிவினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நீதி கிடைக்க வழி செய்துள்ளார். மேலும், நாட்டின் மிகவும் சிக்கலான பகுதிகளிலும் கூட அவர் திறமுடனும், தீரமுடனும் பணியாற்றியுள்ளார்.
அவரது பணிகளிலேயே மிகவும் சிறப்பானது, குழந்தைகள் நலனுக்காக அவர் மேற்கொண்டு வரும் சேவையாகும் என்று பிளாக் கூறியுள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications