மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கங்கை தீர்த்தம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு பயன்படுத்த கங்கை, காவிரி உள்ளிட்ட 7 புனித நதிகளிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேஸ்வர், மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது.
இதற்கு முன்னதாக நேற்று 29ம் தேதி காலை தன பூஜை மற்றும் ஆசார்ய தசவித ஸ்நானம் ஆகியவை நடைபெற்றன. இதை தொடர்ந்து மாலையில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு கிராம தெய்வங்களது அனுக்கிரகம் கோரும் கிராம சாந்தி பூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்துக்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரும் 2ம் தேதி யாகபூஜைகள் நடக்கின்றன. இதற்காக மூன்று பெரிய ஹோமகுண்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, யாகசாலைப் பொருள்கள் தற்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரூரிலிருந்து யாகத்துக்குப் பயன்படுத்த 90 டின்களில் நெய் வரவழைக்கப்பட்டுள்ளது. யாக பூஜைக்கு கங்கை, காவிரி, ராமேசுவரம், வைகை, நூபுரகங்கை உள்ளிட்ட 7 இடங்களிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து கும்பங்களில் ஊற்ற பன்னீர் 40 டின்களில் வரவழைக்கப்பட்டுள்ளது.
பின்னர் கங்கை, காவிர் தீர்த்தங்கள் கும்பங்களில் பன்னீருடன் கலந்து பூஜை செய்யப்படும். பின்னர், கும்பாபிஷேக நிகழ்ச்சியின்போது, கோபுரங்களில் ஊற்றி நன்னீராட்டப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications