ஜெ.வை வரலாறு வாழ்த்தும்-ஈழவேந்தன்
டர்பன்: நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காக துணிவோடு குரல் கொடுத்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை வரலாறு என்றும் வாழ்த்தி நிற்கும் என இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தற்போது தென் ஆப்ரிக்காவில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஈழம் குறித்த பேச்சு தொடர்பாக அவருக்கு நன்றி தெரிவித்து அவர் டர்பனில் இருந்து எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் ஈழத்தமிழர்களின் அன்னை பூமி. அது அவர்களுக்கே உரித்தானது. தமிழீழத்தைத் தவிர வேறு எதுவும் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
நான் ஆட்சிக்கு வரும்போது, வங்காள தேசத்தை அமைக்க இந்திரா காந்தி படைஅனுப்பியது போல ஈழத்திற்கு இந்தியப் படையை அனுப்பி ஈழத் தமிழருக்கு தனிநாடு அமைக்க உதவுவேன். இந்தியாவைப் பிரிக்கும்படியோ, துண்டாடும்படியோ நான் கூறவில்லை.
மாறாக, தமிழீழம் இலங்கையில் அமைந்தே ஆகவேண்டும் என நான் தெளிவாக உள்ளேன். இதற்காக துணிவோடு செயற்படுவேன். என்று ஓங்கி ஒலித்துள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தமிழ் மக்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தமது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துகின்றார்கள்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஈழமக்களுக்காக துணிவோடு குரல்கொடுக்கும் செல்வி ஜெயலலிதாவை வரலாறு என்றும் வாழ்த்தி நிற்கும். தமிழீழமக்கள் என்றும் அவருக்குக் கடப்பாடு உள்ளவர்களாகத் திகழ்வார்கள் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications