ஜெ.வின் அறிவிப்பால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் - ஆஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு

இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
நாம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் குடைச் சங்கம் ஆவோம்.
ஈழத் தமிழர் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் அடைந்திராத துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டு, குழந்தைகள் உட்பட தமது இரத்த உறவுகளை இழந்து, பலத்த காயத்திற்குட்பட்டு, உணவுகளும் மருத்துவ உதவியும் மறுக்கப்பட்டு பெரும் சீரழிவுக்குள்ளாகியிருக்கும் இந்தத் தருணத்தில், உங்களது வருங்கால தமிழ் ஈழம் பற்றிய தெளிவான கூற்றையொட்டி மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து இதை எழுதிக்கொள்கிறோம்.
அத்துடன், இது தமிழ் மக்களுடைய நீதி தர்மமும், உலகத் தமிழரின் மன உறுதியும் குறைந்தபட்சத்தில் இருக்கும் தருணமாகும்.
தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானமான உங்களது அறிவித்தல் தக்க சமயத்தில் கிடைத்து அங்கு துயரத்தில் சிக்குண்டு இருக்கும் மக்களுக்கு அவர்கள் துன்பங்களுக்கு விடிவு வரும் என்ற மன நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்திருக்கின்றது.
அங்கு மரணத்தின் மடியில் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததியின் எதிர்காலத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து, காப்பதற்கு தாங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
உங்கள் எதிர்க்கட்சியினர் சர்வதேச சட்டத்தைப் பற்றி கேள்விகளை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் மனதில் சந்தேகத்தை விதைத்தற்குத் தாங்கள் தக்க பதிலை அளித்ததை நாம் அறிவோம்.
நம்பிக்கை மிக்க உங்களுடைய தீர்வு ஜெனோவாவின் சர்வதேச ஆபத்து உதவிக்குழுவின் குறிப்பாகிய 'பாதுகாப்புக் கடமை (R2P)'யினால் மீண்டும் உறுதியடையும்.
உங்களுடைய தமிழர்களுக்குரிய இந்த உதவி கூடிய சீக்கிரத்தில் கனிந்து மேலும் பல நூற்றாண்டுகளாக வரும் சந்ததியினருக்கு தொடர வேண்டும் என்றும், உங்களுடைய இந்த நோக்கத்திற்காக வரவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் பலத்த ஆதரவையும் பெறுவீர்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்திக்கின்றோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications