முன் கூட்டியே துவங்கிய குற்றால சீசன்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: இந்த ஆண்டு கேரளாவில் பருவ மழை சற்று முன்னதாக துவங்கிவிட்டது. இதை தொடர்ந்து குற்றாலத்திலும் முன் கூட்டியே சீசன் தொடங்கிவிட்டது. தற்போது மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் கொட்ட துவங்கியிருப்பதால் சுற்றுலா பயணிகளின் குவிந்து வருகின்றனர்.
குற்றால அருவியில் குளிக்கும் ஆசை நடிகர்களையும் விட்டுவைப்பதில்லை. சீசன் சமயத்தில் நெல்லை மாவட்டத்தில் நடக்கும் சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ளும் நடிகர்கள் குற்றாலத்தில் குளிக்காமல் செல்வதில்லை.
தற்போது அப்பகுதியில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த டெல்லி கணேஷ், வையாபுரி ஆகியோர் குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவதை கேள்விபட்டதும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தோடு கூட்டமாக இருவரும் குளித்தனர்.
இது குறித்து டெல்லி கணேஷ் கூறுகையில், நான் இப்பகுதியை சேர்ந்தவன்தான். அருவி தண்ணீரில் மூலிகைகள் கலந்து வருவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியை அளிக்கின்றது என்றார்.
நடிகர் வையாபுரி கூறும்போது இந்த ஆண்டு குற்றால சீசனை நாங்கள் முன்னதாகவே அனுபவிக்கின்றோம் என்றார்.
இவ்விரு நடிகர்களையும் காண அங்கு தனி கூட்டம் கூடியது.



Click it and Unblock the Notifications
