வைணவ கல்விக்கு ஆதரவு கொடுங்கள்-ஜீயர் வேண்டுகோள்
சென்னை: வைணவ நெறி வகுப்புகளுக்கு பிரபல நிறுவனங்கள் ஆதரவளிக்க முன் வர வேண்டும் என ஸ்ரீ அஹோபில மடத்தின் 45வது ஜீயர் ஸ்ரீ நாராயண யதீந்திர மகா தேசிகன் ஸ்வாமிகள் கூறினார்.
சென்னை தி.நகரில் இருக்கும் ஸ்ரீ மாலோல வாகீச வாணி கல்வி நிறுவனம் வைணவ நெறிகள் குறித்து நேரடி மற்றும் அஞ்சல் வழி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளை பல்வேறு நிலைகளில் முடித்த 18 வயது முதல் 75 வயது வரை உள்ள 130 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதற்கான நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் வகுப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு ஜீயர் ஸ்வாமிகள் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
குடும்ப கடமைகளுக்கு இடையிலும் பல இல்லத்தரசிகள் இந்த வகுப்புகளில் சேர்ந்து அதனை வெற்றிகரமாக படித்து முடித்துள்ளனர். அவர்களை அனைவரும பாராட்ட வேண்டும்.
வேதங்களை படிப்பதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து வாழ்க்கையின் பொருளை அறிந்து கொள்ள உதவ வேண்டும். ஒரு தனி நபர் பொருள் பொதிந்த சிறந்த வாழ்க்கை வாழ அவருக்கு தேவையான உடல், மனம் மற்றும் ஆன்மிக சமநிலையுடன் கூடிய அமைதியான வாழ்க்கைக்கு இந்தப் படிப்புகள் உதவும்.
வைணவ நெறி வகுப்புகளுக்கு பிரபல நிறுவனங்கள் ஆதரவளிக்க முன் வர வேண்டும் என்றார்.
இந்த வகுப்புகளில் விருப்பமுள்ளவர்கள் இந்த கல்வி நிறுவனத்தை 044 2814 3406 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications