கும்பாபிஷேகம் காணும் திருச்செந்தூர் கோவிலில் யாக சாலை பூஜை தொடக்கம்
திருச்செந்தூர்: கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஜூலை 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக உள்பிரகாரத்தில் தங்க கொடி மரம் அருகேயும், சண்முகருக்கு கோயில் வெளிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்பகுதியிலும் யாகசாலைகல் அமைக்கப்பட்டுள்ளன.
உற்சவர் சண்முகருக்கு 15 லட்சம் செலவில் பிரமண்டமாக யாக சாலை அமைக்கப்பட்டது. இதில் சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 ஹோம குண்டங்களும், பெருமாளுக்கு 5 ஹோம குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நேற்று காலையில் மூலவருக்கு தங்கக் கொடிமரம் அருகே கணபதி ஹோமம், 25 கும்பங்களுக்கு கலச பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பங்களை கோயிலின் மேல் தளத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் மூலவர் விமானத்திற்கு சுத்தி பூஜை நடந்தது.
பூஜையை கேரள தந்திரி சுப்பிமணியரு நடத்தினார். இதேபோல் உற்சவர் சண்முகர் யாகசாலை அருகே சிவாச்சாரியர்கள் கணபதி வழிபாடும், வர்ணபூஜை, அஷ்ட லட்சுமி பூஜை ஆகியவை நடந்தது.
பின்னர் மாலையில் கோயில் சுவாமி பிம்பத்தை கும்பத்தில் எழுந்தருள செய்து பூஜை நடந்தது. இதை தொடர்ந்து முதல் யாகசாலை பூஜை நேற்றிரவு முடிவடைந்தது.
யாகசாலையில் முதல் கட்டமாக 336 கும்பங்கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து முதல் கால பூஜை முடிந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 150 சிவச்சாரியார்கள் நடத்தினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications