நீதி கேட்டு மகள் கல்லறையில் தந்தை உண்ணாவிரதம்
நீலகிரி: நீலகிரியில் தனது மகள் சாவில் உள்ள மர்மத்தை கண்டிபிடித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மகள் கல்லறை முன்பு தந்தை ஒருவர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் குன்னக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் கனிமொழி(19). இவர் குன்னூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19ம் தேதி கடைக்கு சென்ற கனிமொழி, மயங்கிய நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கனிமொழியின் தந்தை சிவா நீலகிரி மாவட்ட எஸ்பிக்கு புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில்,
கனிமொழியும், அவளது தோழியும் ஒன்றாக வேலைக்கு செல்வார்கள். கடந்த 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு எனது மகள் கனிமொழி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் கனிமொழியின் சகோதரர் என்று கூறி யாரோ ஒரு நபர் ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், எனது மகள் இறந்த நாளில் இருந்து அவர் வேலை செய்து வந்த ஜவுளிக்கடையும் திறக்கப்படவில்லை.
ஜவுளிக்கடை அதிபர், அவரது மனைவி மற்றும் எனது மகளின் தோழி ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகள் கனிமொழி உடலை மறு பிரேத பரிசோதனை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இது குறித்து புகார் கொடுக்க மேல்குன்னூர் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் என்னை தரக்குறைவாக பேசினார். எனவே அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் சிவா தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications