காய்ச்சல்-தர்மபுரி மக்களின் வினோத நேர்த்திக்கடன்
பென்னாகரம்: தர்மபுரி அருகே உள்ள ஜங்கமைனூர் கிராமத்தில் சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல், அம்மை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் இன்று ஒரு நாள் ஊரைவிட்டு வெளியேறி வினோத நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது ஜங்கமைனூர் கிராமம். இந்த கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த மூன்று மாதங்களாக சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல், அம்மை நோய் போன்ற நோயின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை எடுத்து கொண்ட போதும் இந்த நோய் தீர்ந்தபாடில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அது மற்றவர்களுக்கும் வேகமாக தொற்றிக் கொள்கிறது.
இந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது ஊரில் உள்ள அனைவரும் கடவுளின் கோபத்தை தணிக்கும் வகையில் ஒரு நாள் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னதாக மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஒரு பகுதியில் தங்கி வினோதமான நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications