பெண் உரிமையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற எஸ்.ஐயின் பைக் பயணம்
பாவூர்சத்திரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜான் மார்ட்டீன் என்பவர், பெண் உரிமையை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் மார்ட்டீன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் பெண் உரிமை, பெண் நீதியை வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மபி, உபி, இமாசல பிரதேசம், டெல்லி, அரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 35 ஆயிரம் கிமீ தூரம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி சென்னையில் தனது பயணத்தை துவங்கிய இவர் 7 நாட்களில் விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, குற்றாலம், சென்றுவிட்டு பாவூர்சத்திரம் வந்தார். பயணத்தின்போது சாலையோரம் உள்ள காவல் நிலையத்திற்கு செல்கிறார்.
அங்குதான் வைத்திருக்கும் நோட்டை கொடுத்து அதில் அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் அல்லது போலீசாரிடம் வாழ்த்து எழுதி பெற்றுக் கொள்கிறார். இதுவரை 250 காவல் நிலையங்களுக்கு சென்றுள்ளார்.
டெல்லி சென்றதும் பெண் உரிமை பற்றிய தனது கோரிக்கை மனுவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், காங் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் கொடுக்கிறார்.
ஓய்வு பெற்றும் பொது பணியில் ஈடுபட்டுள்ள ஜான் மார்ட்டீனை பாவூர்சத்திரம் போலீசார் பாராட்டினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications