குற்றாலத்தில் போலீசார் ரெய்டு-பயணிகள் அவதி

குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிகின்றனர். இதனால் லாட்ஜ்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் நிரம்பி வழிகின்றது.
இந்நிலையில் லாட்ஜூகளில் சட்ட விரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து குற்றாலம் போலீசார் நள்ளிரவில் லாட்ஜ்களில் சோதனை போட்டனர்.
அனைத்து லாட்ஜ்களிலும் சோதனையிட்ட அவர்கள். சந்தேகப்படும்படியானவர்களை மட்டும் விசாரித்து இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று கதவை தட்டி தூங்குபவர்களை எழுப்பி போலீசார் விசாரணை நடத்தினர்.
கணவன், மனைவி என்று கூறி தங்கியிருப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனால் உண்மையான தம்பதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர்.
விபசாரம் எங்கு நடக்கிறது என்பது போலீசாருக்கு நன்றாக தெரியும். அதனை கண்டுபிடித்து தடுக்காமல் போலீசார் வேண்டும் என்றே அனைத்து அறைகளிலும் ரெய்டு நடத்தி சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு செய்கின்றனர். இதனால் பயணிகள் உடனே லாட்ஜை காலி செய்து விடுகின்றனர் என லாட்ஜ் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து லாட்ஜ் உரிமையாளர் ஒருவர் கூறும்போது போலீசார் ரெய்டு நடத்துவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரண்ட் ஆப் போலீஸ் என்ற பெயரில் வாலிபர்களை அழைத்து வந்து ஒவ்வொரு அறையின் கதவையும் தட்டி நள்ளிரவில் சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
அப்படி ரெய்டு செல்லும் போது லாட்ஜ்களில் சம்பந்தப்பட்ட நபர் உடனிருந்தால் சுற்றுலா பயணிகளிடம் விளக்கம் கொடுத்து அவர்களின் அச்சத்தை போக்க வழியுண்டு. ஆனால் போலீசார் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. எந்தெந்த இடங்களில் விபசாரம் நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும்.
ஆனால் அங்கு அவர்கள் செல்லாமல் மற்ற இடங்களில் சென்று இடையூறு செய்வது வருத்தம் தருகிறது. இதே நிலை நீடித்தால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிடும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications