காந்திக்கு தமிழ் கற்று தந்த ரெட்டைமலை சீனிவாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீண்டாமையை ஒழிக்க ரெட்டைமலை சீனிவாசன் எந்த உணர்வோடு போராடினாரோ, அந்த உணர்வுடன் நாமும் செயல்பட வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தையும் அவரது திருவுருவச் சிலையையும் திறந்து வைத்து அவர் பேசுகையில்,

ரெட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்தவர்.

தீண்டாமை என்னும் கொடிய நோயைப் பற்றி நன்கு அறிந்தவர், புரிந்தவர். எனவே, தீண்டாமையினை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.

1900ம் ஆண்டு ரெட்டைமலை சீனிவாசன் தென் ஆப்பிரிக்கா சென்றார். நீண்டகாலம் தங்கியிருந்த அவர், காந்தியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு தமிழை கற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்றார். காந்தி, தமிழில் கையெழுத்திடும் அளவிற்கு தமிழை கற்றுக் கொடுத்தவர் சீனிவாசன்.

அது மட்டுமல்ல, காந்திக்கு திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அவரது தொண்டைப் போற்றும் வகையில், காந்தி மண்டப வளாகத்தில் ரூ.21 லட்சம் செலவில் மணிமண்டபத்தினை கட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழகத்தில் விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிப் போர் தியாகிகள் அனைவருக்கும் நினைவகங்களையும், மணிமண்டபங்களையும் அமைத்தப் பெருமை நம் முதல்வருக்கே உண்டு என்றார் ஸ்டாலின்.

தவறான செய்தி- பரிதி:

இந் நிலையில் அமைச்சர் பரிதிஇளம் வழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் முடிவுற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளிதழில் இரட்டைமலை சீனிவாசன் சிலை கண்ணாடி இழையால் (ஃபைபர் கிளாசில்) உருவாக்கப்பட்டது என்று தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இரட்டைமலை சீனிவாசன் சிலையானது வெண்கலத்தில் 400 கிலோ எடையில் 6 அடி உயரத்தில் செய்யப்பட்டு, சிலை மீது மெட்டாலிக் சில்வரிஷ் கிரே வண்ணப்பூச்சு பூசப்பட்டுள்ளது.

சிலையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் ஆகும். இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் மற்றும் சிலை வடிவமைப்பதற்கு மொத்தமாக செலவிடப்பட்ட தொகை 21 லட்சம் ரூபாய் ஆகும்.

சென்னை கோயம்பேட்டில் இரட்டைமலை சீனிவாசனுக்கு ரூ.19.5 லட்சம் செலவில் மணிமண்டபம் மற்றும் முழு உருவச்சிலை அமைக்க 14.6.2005 அன்று ஆணை வெளியிடப்பட்டு,

பின்னர் 15.2.2006 அன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் மற்றும் முழு உருவச்சிலையினை சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் காமராஜர் நினைவகம் அருகில் உள்ள காலியிடத்தில் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆணை வெளியிடப்பட்டது.

என்ன நடந்தது; எப்போது நடந்தது என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளாமல், உண்மைக்குப் புறம்பாக திரித்தும், திசை திருப்பும் வகையிலும் செய்தி வெளியாகியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது மட்டுமல்லாமல், கண்டனத்திற்குரியதும் ஆகும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+