காவிரியில் வெள்ளப் பெருக்கு - ஒகனேக்கலில் குளிக்கத் தடை

கர்நாடகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபிணி அணை நிரம்பி விட்டது. அதேபோல கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் அபரிமிதமாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழகத்தின் நுழைவுவாயிலான
கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலுவை நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தது. தண்ணீர் வர வர அதிகரித்து கொண்டே சென்றது. பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வரத்தை அளந்து கொண்டிருந்தனர்.
நேற்று மதிய நிலவரப்படி சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததாக மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவியில், பாறைகள் அனைத்தையும் மூழ்கடித்த படி செந்நிறத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நடைபாதையில் 2 அடிக்கு மேல்
தண்ணீர் சென்றது.
தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சினி பால்சில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக கொட்டியது. இதில் ஒரு
சில சுற்றுலா பயணிகள் மட்டும் அருவியின் ஒரமான பகுதியில் நின்று குளித்து கொண்டிருந்தனர்.
ஆனால், ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் காவிரி கரையோரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் நடைபாதையை யாரும் கடந்து செல்ல முடியாத அளவுக்கு குறுக்கே கயிறு கட்டப்பட்டது. அந்த இடத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
இதனால் ஆடி மாத பிறப்பையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரத்தில் தண்ணீரை தலையில் தெளித்து கொண்டு திருப்தி அடைந்தனர். ஒரு சில பயணிகள் சின்னாற்றில் ஆனந்தமாக குளித்தனர்.
பென்னாகரம் தாசில்தார் டியூக்பொன்ராஜ் ஆற்றில் பரிசல் ஒட்ட தடை விதித்தார். இதனால் படகுதுறையில் பரிசல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட கலெக்டர் அமுதா கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். தண்டோரா மூலம் இந்த எச்சரிக்கை விடப்பட்டது.
விநாடிக்கு 59,000 கன அடி நீர் திறப்பு..
இதற்கிடையே, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து விநாடிக்கு கிட்டத்தட்ட 59 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜசாகரிலிருந்துதான் அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீரும், கபிணியிலிருந்து 4,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications