சீமான் அண்ணன் மகள் குமாரி யாழினி 'தமிழ் அமுது' நாட்டிய நிகழ்ச்சி!
இயக்குநர் சீமானின் அண்ணன் மகள் குமாரி யாழினியின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கிறது.
'தமிழ் அமுது' எனும் இந் நிகழ்ச்சி, பரத நாட்டிய மேதை டாக்டர் பத்மா சுப்ரமணியம், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் நிகழவிருக்கிறது.
தமிழ் ஈழத்தை தாயகமாகக் கொண்ட யாழினி பிறந்து வளர்ந்தது கனடாவில். யாழினியின் தந்தை ராஜகுலசிங்கம், அம்மா மணிமேகலை ராஜகுல சிங்கம்.
இவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும், தமிழ் கலாச்சாரம், கலைகளில் தங்கள் மகள் முழுமையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆவலில், பரத நாட்டியக் கலைஞர் நிரஞ்சனாவிடம் 5 வயது முதலே பரதம் கற்க வைத்தனர்.
மேலும் பரதத்தின் நுணுக்கமான அம்சங்களை நர்த்தகி நடராஜிடம் கற்றுள்ளார் யாழினி. தமிழ் கலாச்சார, மரபு நடனங்களை தஞ்சை நால்வர் பாணியில் கலைமாமணி நர்த்தகி நடராஜிடம் கற்றுத் தேர்ந்துள்ளார்.
இது தவிர முனைவர் தியாவிடம் பாரம்பரிய சங்கீதமும் கற்றுள்ளார்.
தமிழர்கள் உலகமெல்லாம் பரந்து விரிந்திருந்தாலும், அவர்களின் வேர்கள் உறவுகளாக இருப்பது தாய் தமிழகத்தில்தான் என்பதால், அந்த உறவுகளுக்கு மத்தியில் தங்கள் மகளின் நாட்டிய நிகழ்ச்சி நிகழவேண்டும் என விரும்பினர் யாழினியின் பெற்றோர். அந்த விருப்பம் இப்போது நிறைவேறப் போகிறது.
மயிலாப்பூர் கீழ மாட வீதியில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நாட்டிய நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் பத்மா சுப்ரமணியம், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுடன் கலை உலகப் பிரமுகர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications