கண்கவர் நிகழ்ச்சிகளுடன் குற்றாலத்தில் சாரல் துவங்கியது
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். லிங்கம் எம்பி, கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஜெயராமன் வரவேற்றார்.
அமைச்சர்கள் பெரியசாமி, சுரேஷ்ராஜன், மைதீன்கான், பூங்கோதை, மாலைராஜா எம்எல்ஏ, பேரூராட்சி தலைவி ரேவதி, துணை தலைவர் ராமையா பேசினார்.
விழாவில் அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா துறையின் சார்பில் சார்பில் ரூ.11 கோடிக்கு வளர்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றாலத்துக்கு ரூ.6.5 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. குற்றாலத்திற்கு இதுவரை 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்றார்.
அமைச்சர் பெரியசாமி பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் சுற்றுலா துறையின் சார்பில் மேற்கொள்ளபட்ட பல்வேறு பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பழனி, கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் பேசுகையில் குற்றாலத்தை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல் சுகாதரதலமாகவும் விளங்குகிறது. சுற்றுலா துறை தந்த நிதியால் ரூ.1 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 4.5 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
படகு குழாமில் பூங்கா மேம்பாடு, இரவிலும் படகு சவாரி மேற்கொள்ளும் விதத்தில் ஒளிவெள்ள விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வதற்கு 32 லட்ச ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஊட்டியை மிஞ்சும் அளவிற்கு குற்றாலம் படகு குழாம் விளங்கும். குற்றாலத்தில் ஆண்டுக்கு 50 நாட்கள் தான் சீசன் உள்ளது.
ஆனால் அந்த சமயத்தில் கூட இரவு 12 மணிக்கு மேல் கடை திறக்க கூடாது என்று புதிதாக வந்துள்ள காவல்துறை அதிகாரி உத்தரவு போட்டு வருகிறார்.
இரவு நேரத்தில ஏராளமானோ்ர் குளித்து வரும் நிலையில் கடைகள் திறந்திருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு ஆகும். இதனை கருத்தில் கொண்டு தடையை விளக்க வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக அரசு சொல்வதே செய்வதற்குதான் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்றார்.
சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில், பாணதீர்த்த அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் விழுவதை போல குற்றாலத்திலும் நீர்தேக்கம் அமைத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் விழ ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
விழாவுக்கு வராத எம்பி, எம்எல்ஏக்கள்
இவ்விழாவில் நெல்லை எம்பி ராமசுப்பு, காங் எம்எல்ஏக்கள் வேல்துரை, பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திமுக எம்எல்ஏ அப்பாவு, அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி, மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் உள்பட யாருமே கலந்து கொள்ளவில்லை.
ஆனால் மாற்று கூட்டணியில் உள்ள இ.கம்யூ தென்காசி எம்பி லிங்கம் மட்டும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா நேற்று காலதாமத்தோடு இரவு 8.20க்கு தொடங்கி 9.45க்கு முடிவு பெற்றது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!













Click it and Unblock the Notifications