அரண்மனை வீட்டை விற்க முடியாமல் திணறல் - வாடகைக்கு விடும் லட்சுமி மிட்டல்

Subscribe to Oneindia Tamil

Mittal House
லண்டன்: பொருளாதார மந்த கதியால், வடக்கு லண்டன், ஹாம்ப்ஸட்ட் பகுதியில் உள்ள தனது அரண்மனை போன்ற வீட்டை யாரும் வாங்க முன்வராததால், அதை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார் கோடீஸ்வரர் லட்சுமி மிட்டல்.

பொருளாதார மந்த நிலை இந்தத் துறை என்றில்லாமல் அத்தனை துறைகளையும் பாடாய்ப் படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஸ்டீல் அதிபர் லட்சுமி மிட்டல் ஹாம்ப்ஸட்டில் உள்ள தனது அரண்மனை போன்ற பெரிய வீட்டை விற்க முடிவு செய்திருந்தார். ஆனால் பெரும் விலை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் தற்போது விற்கும் முடிவை விட்டு விட்டு வாரம் 10,000 பவுண்டுகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்து விட்டார்.

இந்த வீட்டை கடந்த 1996ம் ஆண்டு 6.75 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கினார் மிட்டல்.

இந்த பிரமாண்ட வீட்டில் 11 படுக்கை அறைகள், 12 குளியறைகள், ஒரு நீச்சல் குளம், 6 வரவேற்பரைகள், ஸ்டீம் ரூப் உள்ளிட்டவை உள்ளன.

இந்த வீ்ட்டை அலங்காரப்படுத்த ஏகப்பட்ட பணத்தை இறைத்துள்ளாராம் மிட்டல். எனவே குறைந்த விலைக்கு இதை விற்க அவருக்கு மனம் வரவில்லை. எனவேதான் அவசரப்படாமல் இருப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளாராம்.

இந்த வீட்டிலிருந்து 2004ம் ஆண்டு காலி செய்து விட்டு கென்சிங்டனில் உள்ள 15 பெட்ரூம் கொண்ட வீட்டுக்கு மாறினார் மிட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. கென்சிங்டன் வீட்டை 57 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கினார் மிட்டல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+