பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் உதவி

பெங்களூரில் ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.
முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகியோர் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து வள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினர் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
அப்போது விழாவுக்கு வருமாறு கூறி அழைப்பிதழ் அளித்தனர். மேலும், திறப்பு விழா செலவுக்கு தமிழக அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற முதல்வர் கருணாநிதி ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கர்நாடக மாநிலம் பெங்களூரில், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தினால் அமைக்கப்பட்டு, 9.8.2009 ஞாயிற்றுக்கிழமையன்று திறக்கப்படவிருக்கும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா செலவுகளுக்காக நிதியுதவி வழங்குமாறு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.மீனாட்சிசுந்தரம், செயலாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் கோரிக்கை அளித்தனர்.
அதனை ஏற்று, தமிழக அரசின் சார்பில் சிறப்பு மானியமாக 10 லட்ச ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications