அன்பழகன் தலைமையில் அண்ணா நூற்றாண்டு நினைவு மலர் கமிட்டி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி வெளியிடப்படவுள்ள நினைவு மலர் தயாரிப்புக் கமிட்டி, அமைச்சர் அன்பழகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்மொழி இன வரலாற்றில் தனிப்பெரும் வளர்ச்சியும், மாற்றமும் நிகழ வழிவகுத்த அண்ணாவின் நூற்றாண்டு விழாவை தகுந்த முறையில் அரசு கொண்டாடி வருகிறது.
ஆற்றல்மிகு எழுத்துகளால் ஆர்வம் பெருக்கும் பேச்சுகளால் ஆட்சிப்பீடம் ஏறிய அண்ணா ஆற்றிய பணிகளும், சாதனைகளும் வரலாற்று சிறப்புடையவை. தமிழும், தமிழகமும் தலைநிமிர்ந்து வாழத் தன்னை முழுமையாய் ஒப்புவித்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பித்திடவும், விழாவின் இனிய நினைவு கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திடவும், நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அமைச்சர் அன்பழகன் தலைவராகவும், அமைச்சர் பரிதி இளம்வழுதி துணைத் தலைவராகவும், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ராசேந்திரன் உறுப்பினர்-செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கனிமொழி எம்.பி., கவிஞர்கள் அப்துல்ரகுமான், கா.வேழவேந்தன், மற்றும் கயல் தினகரன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மலர் தயாரிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் தலைமையில் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், உறுப்பினர்-செயலர், உறுப் பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சி.காமராஜ், தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை தலைவர் ராமசாமி, பதிப்புத்துறை இயக்குனர் கண்ணபுரக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications