வண்டலூர் பூங்காவில் வருகிறது பட்டாம் பூச்சி பூங்கா

ரூ. 5 கோடி நிதியில் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் திட்டம் குறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ளதைப் போல இந்த பட்டாம் பூச்சிப் பூங்கா அமையவுள்ளது. மேலும் சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் உள்ளதைப் போன்ற நைட் சபாரி வசதியும் இங்கு செய்யப்பட்டு வருகிறது.
பட்டாம் பூச்சிப் பூங்காவை அமைக்கும் பணியில் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் ஈடுபடவுள்ளது. இந்தப் பணியில் கேரள வன ஆய்வுக் கழகமும் உதவி செய்யவுள்ளது.
பட்டாம் பூச்சி பூங்காவில் விதம் விதமான செடி வகைகள் இடம் பெறஉம். மேலும் லேன்ட்ஸ்கேப், நீரூற்றுகள், மலைத் தோட்டங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். பட்டாம் பூச்சிகளுக்கேற்ற சூழல் இங்கு இயற்கையாக வடிவமைக்கப்படும்.
பட்டாம் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யவும், முட்டையிடவும் தோதான செடிகளும் இங்கு வளர்க்கப்படும். இந்தப் பகுதியில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் இருக்கும் வகையில் குளங்களும் வெட்டப்படும்.
விரைவில் இந்த திட்டத்திற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை அனுமதி அளிக்கும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் இந்த பட்டாம் பூச்சி பூங்கா வண்டலூர் பூங்கா வளாகத்திற்குள் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
இந்தியாவில் 1500 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 300 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications